20 years ago, 17 ACF aid workers were killed in Muttur, and still there is no accountability. In 2015, a UN Human Rights investigation found “reasonable grounds to believe that members of the security forces committed the extrajudicial executions” - UN Human Rights Chief Volker Türk #ACFMassacre
maatram.org
@maatram.bsky.social
Maatram is a citizens journalism website in Tamil, based in Sri Lanka. Established in 2014 www.maatram.org
மஸ்ஜிதுல் ஜும்மா பள்ளிவாசல் மற்றும் மஞ்சந்தொடுவாய் ஹுசைனியா பள்ளிவாசல் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல் இடம்பெற்று இன்றோடு 36 ஆண்டுகள். சிறுவர்கள், முதியவர்கள் உட்பட 103 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். 140 பேர் வரை காயமடைந்தார்கள். 📸 @CrisisGroup
மூதூரில் இயங்கிவந்த ஏ.சி.எப். தொண்டு நிறுவனத்தின் பணியாளர்கள் 17 பேர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 20 வருடங்கள் நிறைவு. இவர்கள் முழந்தாளிடப்பட்டு விசாரணையின்றி சுடப்பட்டனர், இவர்களைச் சுட்டவர்கள் இலங்கையின் பாதுகாப்புப் படையினர்தான் - @actioncontrelafaim.bsky.social #ACFMassacre #SriLanka 📸 Getty Images
நோக்கம் நபர்களை மாற்றுவதாக இருக்கக் கூடாது, அமைப்பை மாற்றுவதாக இருக்க வேண்டும்; அமைப்பில் ஏற்படும் மாற்றம் சட்டபூர்வமானதாகவும் நிலையானதாகவும் மாறுவது அது மக்களின் நம்பிக்கையின் மீது கட்டியெழுப்பப்படும்போது மட்டுமே. 👉 maatram.org/articles/12867 #lka #SriLanka
#EasterSundayAttacks தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை, கடமை தவறியமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு மூவர் அடங்கிய மேல் நீதிமன்ற நீதியரசர்கள் குழாத்தின் பெரும்பான்மை நீதியரசர்கள் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு.
அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ ஆவணங்கள், அமைச்சரவை முடிவுகள், அரச கொள்கைகள் மற்றும் நடைமுறையில் உள்ள சட்டங்களில் இன்னும் "இந்திய வம்சாவழி தமிழர்" என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது. இந்த முரண்பாடு நீடிக்கக்கூடாது. 👉 maatram.org/articles/12854 #Malaiyaham #MalaiyahaTamil #SriLanka
நபர்கள் தங்களுடைய பாலினத்தை சட்டப்பூர்வமாக மாற்றுவதற்கு அனுமதிக்கும் சுற்றறிக்கை ஒன்றை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை, பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. www.facebook.com/share/p/1HFk... #lka #SriLanka #LGBTIQ
இளைஞர்களுடனான கலந்தாலோசனையானது சட்ட உருவாக்கத்தை வடிவமைக்க வேண்டும்; மாறாக, ஒரு மோசமான சட்டம் அவசரமாக இயற்றப்பட்ட பின்னர், வெறும் பெயரளவிலான (performative) ஒரு சடங்காக அது அமைந்துவிடக்கூடாது. 👉 maatram.org/articles/12850 by @sanjanah.bsky.social #lka #SriLanka
மாத்தளை மனிதப் புதைகுழி வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்குமாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மாத்தளை நீதிமன்றத்திற்கு முன்பாக நேற்று அமைதியான முறையில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 📸 FOD, Luxman Warnakulasuriya #enforceddisappearances #SriLanka
திட்டமிட்டு எழுதப்பட்ட தனிமை, கணவனை இழந்த நிலை, விவாகரத்து மற்றும் நிதி நெருக்கடி போன்ற சூழல்களை காட்டி, இரக்கப்படும் ஒரு புதியவரை public comment பகுதியிலிருந்து private WhatsApp chat வரவழைக்கும் வகையில் இவை ஒவ்வொன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளன. 👉 maatram.org/articles/12842 by @sanjanah.bsky.social
கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமுக வலுப்படுத்தல் எனும் அமைச்சினை உருவாக்கியுள்ளது. இவ்வமைச்சிற்கு 837 பில்லியன் ரூபாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த பட்ஜெட்டில் 9.3% ஆகும். இதேபோல் மகளிர் சிறுவர் விவாகார அமைச்சு, இளைஞர் விவகார அமைச்சு உட்பட அனைத்து அமைச்சுகளுக்கும் போதிய நிதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அமைச்சுகளின் வேலைத்திட்டங்களில் மலையக மக்கள் உள்ளடக்கப்படவில்லை. maatram.org/articles/12837 #MalaiyahaTamil
கைதிகள் ஏற்படுத்தவிருந்த பேரழிவை தடுக்கவே அதிகாரி சிறைச்சாலை கதவின் துளையூடாக துப்பாக்கிச்சூடு நடத்தினார் - பதில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார www.facebook.com/share/v/1Bc1... #NegomboPrison 📹 Ada Derana
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். #lka #SriLanka #NegomboPrison 📷 Ada Derana
கடற்படையின் நிறைவேற்று அதிகாரிகளை (Executive Officers) இணைத்துக் கொள்வதற்காகக் காணப்படும் தகைமைகளை, யோஷித ராஜபக்ஷவை இலகுவாக இணைத்துக் கொள்ளும் வகையில் மாற்றியமைத்ததாக மற்றும் யோஷித ராஜபக்ஷவை அப்போதைய பிரித்தானியா ராயல் கடற்படைக் கல்லூரியில் (Britannia Royal Naval College) பயிற்சிக்காக அனுப்பியதன் மூலம் அரச நிதியை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவே... www.facebook.com/share/p/1KpJ...
மனிதர்களின் விருப்புரிமைகளையும், அதிகார ஆதிக்கத்தையும் குறைத்து, வெளிப்படையான, தரவு அடிப்படையிலான முடிவுகளை செயற்கை நுண்ணறிவிடம் ஒப்படைப்பதன் மூலம், உள்ளூராட்சி மன்றங்களை உண்மையான மக்கள் சபைகளாக மாற்ற முடியும். 👉 maatram.org/articles/12832 by @arulkarki.bsky.social
பல அரசியல் அணுகுமுறைகள் இன்னும் வடக்கு - கிழக்கு மைய அரசியல் சிந்தனையிலேயே தங்கியுள்ளன. இந்த அணுகுமுறை, தமிழர் சமூகத்தின் பல்வகைப்பட்ட அனுபவங்களையும் தேவைகளையும் பிரதிபலிக்கும் ஒரு விரிவான அரசியல் திட்டத்தை உருவாக்குவதில் தடையாக அமைகிறது. 👉 maatram.org/articles/12828
தான் தீவிரமாக கண்காணிக்கப்படுவதை நன்கு அறிந்திருந்த முன்னாள் புலனாய்வுத் தலைவர் ஒருவர் தனக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய எந்தவொரு தகவலையும் தனது கைப்பேசியில் அல்லது தனிப்பட்ட கணினியில் சேமித்து வைத்திருப்பார் என்று எதிர்பார்க்க முடியுமா? 👉 maatram.org/articles/12824 #lka #SriLanka #EasterSundayAttacks
மேலோட்டமாக இது அவர்களுக்குக் கிடைக்கும் ஒரு தொழில்முறை மதிப்பாக அல்லது அங்கீகாரமாகத் தோன்றினாலும், இதன் உண்மையான மறைமுக நோக்கம் சுயாதீன குடிமக்களை நிறுவன மற்றும் அரச ஒழுங்குமுறை வரம்பிற்குள் கொண்டு வருவதாகும். maatram.org/wp-content/u... #lka #SriLanka #FOE @smdsrilanka.bsky.social
DOCUMENTARY | ‘தித்வா’ பேரிடரும் தீராத முகாம் அவலமும் youtu.be/4jzXNa44auc?... #Ditwah #SriLanka #Malaiyaham
'Ditwah' பேரிடரும் தீராத முகாம் அவலமும்
YouTube video by Maatram Sri Lanka
youtu.be
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 09 மாத சிறைத்தண்டனை: உறுதி செய்தது கொழும்பு மேல் நீதிமன்றம் www.facebook.com/share/p/1C6K... #lka #SriLanka
தேயிலை பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளி பாம்பு தீண்டி உயிரிழந்த சோகம், தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பற்ற வாழ்வாதாரத்தை உணர்த்துகிறது. அடிப்படைத் தொழில் பாதுகாப்பும் உடனடி மருத்துவ உரிமைகளும் மறுக்கப்படுவது, உழைப்புச் சுரண்டலின் உச்சக்கட்ட மனித உரிமை மீறலாகும். #MalaiyahaTamil #Malaiyaham #CeylonTea #SriLankaTea
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று வியாழக்கிழமை மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #EasterSundayAttacksLK #EasterSundayAttacks 📸 virakesari.lk
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். #PTA #EasterSundayAttacksLK #EasterSundayAttacks #SriLanka #lka
தரவுகளாகச் சுருங்கிப் போகும் ஆபத்திலிருந்து மனிதன் தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டுமாயின், அவன் தனது சிந்தனைச் சுதந்திரத்தை இயந்திரங்களிடம் அடகு வைப்பதை நிறுத்த வேண்டும். 👉 maatram.org/articles/12814 By @arulkarki.bsky.social #lka #SriLanka #AI
வட்டுக்கோட்டைத் தீர்மானமும், தேசம், பிராந்தியம் மற்றும் தேசத்திற்கும் அரசுக்கும் இடையிலான உறவு குறித்து அது கொண்டுள்ள அனுமானங்களும் ஐரோப்பிய நவீனத்துவத்தை பிரதிபலிக்கும் ஓர் அரசியல் தர்க்கத்தினையே வெளிப்படுத்துகின்றன. 👉 maatram.org/articles/12807 #lka #SriLanka #VaddukoddaiResolution
கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 11 நபர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளார். எதிர்வரும் ஜூலை 27 திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு #Navy11
இலங்கையில் #PTA சட்டத்தின் கீழ் தொடரும் கைதுகளுக்கு Amnesty International கவலை தெரிவிப்பதுடன், பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறது: www.facebook.com/share/p/1ELe... 1️⃣ பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு உடனடியாக இடைக்காலத் தடை விதித்தல். 2️⃣ இச்சட்டத்தை தாமதமின்றி முழுமையாக நீக்குதல். #RepealPTA